Tuesday, December 06, 2005

நான்கு கில்லாடிகள்

நேற்றிரவு (05-Dec-2005) எங்கள் அறையில் தூங்கும் முன் சந்திரமுகி படத்தின் climax 'மட்டும்' பார்த்து உறங்கச் சென்றோம். உறங்கும் முன் சும்மா அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் பேச்சு பேய் படங்களைப் பற்றியும், சிறு வயதில் எப்படியெல்லாம் பயந்துக் கொண்டிருந்தோம் ("மை டியர் லிசா", "யார்?", "ஜென்ம நட்சத்திரம்", "பூவிழி வாசலிலே", கொம்பு முளைத்த பேய் குழந்தை...), பின் பொதுவாக பேய் பற்றி வந்தது. அப்பொழுது இரவை கிழித்துக் கொண்டு இடியென இறங்கியது எங்கள் சிரிப்பு. காரணம் என் அறைவாசிகளில் ஒருவனான சரவணகுமார்.

சரவணகுமார், இனி சரவணன், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் M.M.D.A-வில் தன் மூன்று நண்பர்களுடன் (இவனுடன் சேர்த்து தான் "நான்கு கில்லாடிகள்") ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்கள். வீடோ சற்றே பெரியது. வாடகையோ வெறும் 2500/- மட்டுமே. சரவணனுக்கு ரொம்ப சந்தோஷம். "அடடா! நமக்கு 2500/- ரூபாயில super வீடு கிடைச்சிடுச்சே" என்று. ஒரு நல்ல நாளில் barley பால் காய்ச்சி 'குடி' புகுந்தனர். அந்த வீட்டின் உரிமையாளார் சற்றே வயதானவர். Advance பற்றியும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சரவணனுக்கோ, சென்னையில் ஏன் இன்னும் சற்றேவாவது மழை பெய்கிறது, சென்னையில் தான் எவ்வளவு நல்லவர்கள் என்று ஆனந்தக் கண்ணீர் வேறு. இவையாவும் முதல் ஒன்றிரண்டு வாரங்கள் மட்டுமே. பின் தான் Run விவேக் போல ஆகப்போகிறோம் என்று தெரியாமல்...

ஒரு நாள், சரவணன் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பொழுது, எதிர் வீட்டில் இருந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்திருக்கிறான். அவர்கள், சரவணனிடம் பேச்சுவாக்கில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு இளம் மனைவி ஒருவர் இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன் வீட்டின் சமையற்கூடத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். அவ்வளவு தான். புலிப்பாண்டியாய் இருந்தவர்கள் அன்று முதல் கிலிப்பாண்டியாக ஆனார்கள். அப்பொழுதுதான் அவனுக்கு பல உண்மைகள் விளங்கிற்று. இதை கேள்விப்பட்டு நான்கு கில்லாடிகளில் ஒருவன் escape.

"குளிச்சிட்டு இருப்பேன். திடீர்னு அந்தம்மா தூக்கு போட்டுக்கிட்டது ஞாபகத்துக்கு வரும். அவ்வளவு தான். மனசு திக் திக்-னு அடிச்சிக்கும். அடிச்சு புடிச்சு குளிச்சு முடிச்சு (கவித மாதிரி இல்ல?) வெளியே ஓடி வந்துடுவேன்".

"நான் தூங்கலாம்னு படுத்துட்டு இருப்பேன். அப்படியே என் மனசு இப்படியே போய் அந்த சமையல்கட்டுக்கு போகும். அங்க அந்தம்மா கழுத்துல சுருக்கு மாட்டிட்டு 'தபால்'னு குதிக்கிற மாதிரி நெனப்பு வரும். அப்படியே 'கப்புன்னு' எழுந்து ஓடிவந்துருவேன்".

"ராத்திரி தூங்கும் போது கூட light-அ அனைக்கமாட்டோம். Tube light போட்டுட்டு தான் தூங்குவோம். அந்த பழக்கம் தான் இப்பவும் தொத்திகிச்சு". எங்களுக்கு அப்பொழுதுதான் இவன் ஏன் Tube light போட்டுட்டு தூங்கறான்னு ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தெளிந்தது.

"நாங்க நாலு பேர். எப்பவும் ஒன்னாத்தான் போவோம், ஒன்னாத்தான் வருவோம். எங்களுக்கு பயம்னா என்னன்னு நல்லாத்தெரியும்" என்று கக்க கக்க style-ல (காக்க காக்க தான், பயத்துல இப்படி ஆயிடுச்சு) சொன்னான்.

அறை சற்றே நிசப்தம் ஆனது. அப்பொழுது ஹாரிஸ் அவன் காதின் ஓரத்தில் மெதுவாகத் தொட்டான். அவ்வளவு தான். பயந்து அலறி எங்களையெல்லாம் திட்ட ஆரம்பித்துவிட்டான்.

பிறகு ஆறுமாதம் கழித்து, அந்த வீட்டைக் காலிசெய்துவிட்டு, (ஓடி) வந்து விட்டார்கள். இல்லாவிட்டாலும், நாள் ஆகிவிட்டதால், அந்த வீட்டின் உரிமையாளர் வாடகையை அதிகரித்து புதிய tenant-ஐ தேடிக்கொண்டிருந்ததாக கேள்விப்பட்டதாக கூறினான்.

பிறகு, எங்கள் பேச்சு ஊரில் பேய் ஓட்டுவது, சித்த வைத்தியம், பில்லி சூன்யம் பற்றியெல்லாம் சுற்றிற்று. தூக்கம் வர சுமார் இரண்டு மணியாயிற்று.

"கைப்புள்ள. இன்னும் ஏன்டா முழிச்சுட்டு இருக்க. தூங்..."