Monday, August 11, 2008

Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்...

நேற்று வேறொருவருக்கு நோக்கியா அலைபேசி வாங்கலாமென்று பான்டி பசாரில் இருக்கும் யூனிவர்செல்-லுக்கு சென்றிருந்தேன். நோக்கியா 3600 வாங்கும் யோசனையில் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் என் நாக்கில் சனி நர்த்தனம் ஆடிற்று. 'ஆடித்தள்ளுபடி எந்த எந்த மாடலுக்கு' என்று கேள்வி கேட்டேன். பின் தான் தெரிந்தது அது சும்மா ஒரு விளம்பரத்திற்கு தான் என்று. கடைசியில் வெகு வெகு சொற்பமான, ஓடாத மாடல்களுக்கே ஆடித்தள்ளுபடி என்று. சரி! விடக்கூடாது என்று மொபைல் மாடல்களை காட்டுங்கள் என்ரு கேட்டேன். சில மாடல்கள் சொன்னார்கள்.

எந்த மாடல் ஓடாதோ அந்த மாடல்களுக்கு ஆடித்தள்ளுபடி என்று தள்ளிவிடுகிறார்கள். அதுவும் ஒருவர் ஒரு மாடலை சொன்னால், அது நமக்கு பிடித்து போனால் உடனே இன்னொருவர் 'இல்லை, இந்த மாடலுக்கு இல்லை' என்பார். எல்.ஜி.-யில் (நாட் ப்ரம் ம.தி.மு.க) ஒரு மாடல் விலை 20K என்றும் அந்த மாடல் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் சொன்னார்கள். சரி அதை காண்பியுங்கள் என்று சொல்ல, அதை எடுத்து வந்தார்கள். அது 5MP கேமரா உள்ள மாடல். மாடலும் ஓ.கே. நோக்கியா 3600-ன் விலை 9600 ரூபாய். சரி! 20K அலைபேசி 10K-க்கு கிடைக்கிறதே என்றும், வழக்கமாக நோக்கியா தான் வாங்குகிறோம், ஒரு சேஞ்சுக்கு மற்ற கம்பேனி வாங்கலாம் என்று ஒரு யோசனை இருந்ததாலும், முக்கியமாக யூனிவர்செல் மேல் நம்பிக்கை இருந்து தொலைத்ததாலும் வேறு எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி வந்தேன். வாங்கும் நோக்கில் செல்லவில்லை. சும்மா பார்த்து வரலாமே என்று தான் சென்றேன். பின் காற்று வாங்க போன இடத்தில் கழுதை வாங்கி வந்த கதையாக, இதை வாங்கி வந்தேன்.

அவர்கள் சொன்னது இந்த மாடலின் விலை 20K, தள்ளுபடி போக 10K என்று. ஆனால், இன்று அலுவல் வந்ததும் அதன் விலையை அவர்களுடைய வலையில் பார்த்தால் அதன் விலை 10,500+ தான். சரி தள்ளுபடி போக போட்டிருப்பார்களோ என்று பார்த்தால் மற்ற கடைகளிலும் இதே விலை தான் (இதில் இன்னொருத்தர் அந்த மொபைல் விலை 13K என்றும் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் உளரினார். அதுவும் தவறு). கோபமுடன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால், 'எங்கள் கடையில் விலை 10K தான்' என்றார்கள். அப்புறம் ஏன் தள்ளுபடி என்று போடுகிறீர்கள் என்றால், MRP விலை 27+ அதை ஒப்பிட்டு பார்த்தால் 5MP கொண்ட இந்த மொபைல் சீப் தானே என்று வியாக்கியானம் பேசினார்கள். அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், 'சீப்'பா என்று.

மேலும், அந்த மாடலின் ஒர்ஜினல் விலை 27K. இப்பொழுது தள்ளுபடியில் எல்.ஜி.யே இந்த விலைக்கு கொடுகிறது. அப்புறம் எதற்கு இந்த மொள்ளமாறித்தனம்? கேட்டால் பதில் இல்லை.

இது தான் யூனிவர்செல்-லின் ஆடித்தள்ளுபடியின் லட்சனம்.

மேலும், என் நோக்கியா 6300-ன் டிஸ்ப்லே அவுட். எவ்வளவு ஆகும் என்று விசாரித்தால் வெளியில் 1300 ரூபாய் ஆகும் + ஒரு நாளின் மற்றிவிடலாம் என்று சொன்னார்கள். அதுவும் ஒரிஜினல் டிஸ்ப்ளே. (இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை). அதே யூனிவர்செல்-ல் 2800 ரூபாய் + 7 நாட்கள் ஆகுமாம்.

இனி யூனிவர்செல்-க்கு செல்லவேகூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

இது இங்கு மட்டும் இல்லை. சென்ற வாரம் சரவணா ஸ்டோருக்கு சென்றிருந்தேன். திரும்பும் இடமெல்லாம் ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக சோப் + அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதன் மேல் ஒரு தகவல் பலகை இருக்கும். உதா, 1+1 ஆஃப்பர் என்று. அதே போல எல்லா இடங்களிலும் ஆடித்தள்ளுபடி என்று தொங்க விட்டிருந்தார்கள். 'சரிங்க! இதுக்கு தள்ளுபடி உண்டா' என்று கேட்க. 'இல்லை! அதோ அங்கு ஒரு மூளையில் இருக்கே, அந்த ஷெல்ஃபுக்கு மட்டும் தான்' என்றார்கள்.' அப்புறம் எதற்கு எல்லா இடங்களிலும் ஆடித்தளுபடின்னு போட்டிருக்கீங்க?' என்றால் சிரிப்பு தான் பதில்.

ஆக, வாடிக்கையாளர்களே தெய்வம்! வாடிக்கையாளர்களே முட்டாள்களும்.

போங்கடா நீங்களும் உங்க, அயோக்கிய, ஆடித்தள்ளுபடிகளும்.